

ஒவ்வொரு வேட்பாளரையும் அறிமுகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஓர் அணி உருவாகியுள்ளது. இதில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக கமல்ஹாசன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்காகத் தனித்தனியாக பிரத்யேக வீடியோ ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.
இதில் அந்த வேட்பாளரை அறிமுகப்படுத்தி, மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட்டை அனைவருக்கும் கமல் கொடுக்கிறார். இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.
இதுபோன்று தனித்தனியாக வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் வீடியோவை, தமிழகத்தில் இதர கட்சிகள் செய்யவில்லை. இதுவொரு புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கமல் வெளியிட்டுள்ள சில வீடியோக்கள் இதோ: