

திமுக கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் எம்ஜிஆர் கழகம், தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமப்புற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
எம்ஜிஆர் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், எம்ஜிஆர் கழக நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் ஆர்.எம்.வீரப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பி.மதியழகன் தலைமையிலான தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமபுற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் நலச் சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.