Last Updated : 20 Mar, 2021 03:14 AM

 

Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

மீண்டும் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அச்சம்; கபசுர குடிநீர் விநியோகத்தைமீண்டும் தீவிரப்படுத்த வலியுறுத்தல்: தமிழகத்தில் கடந்த ஆண்டு 400 டன் கபசுர குடிநீர் விநியோகம்

சேலம்

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கபசுர குடிநீர்விநியோகத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழகம் உட்பட உலகம் முழுவதும் கரோனா பரவல்அதிகரித்து, மக்களை அச்சுறுத்தியது. இதற்கு உரிய மருந்துகள்இல்லாத நிலையில், சித்த மருத்துவமருந்தான கபசுர குடிநீர், ஒருமாற்று மருந்தாக முன்வைக்கப்பட்டது. கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுரகுடிநீரும் ஒரு மருந்தாக வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கபசுர குடிநீரைஅருந்த பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், நிலவேம்பு குடிநீர் போல, கபசுர குடிநீருக்கும்மக்களிடம் பெரும் வரவேற்புகிடைத்தது. பலரும் குடும்பத்துடன்கபசுர குடிநீரை பருகினர். இதையடுத்து, கரோனாவின் தாக்கம்தமிழகத்தில் படிப்படியாக குறைந்ததையும் காண முடிந்தது.

இந்நிலையில், தற்போது கரோனா 2-வது அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் கபசுர குடிநீர் விநியோகத்தை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது:

1,000 ஆண்டுகளுக்கு முன்பேதிப்பிலி, நிலவேம்பு, சீந்தில்பொடி,ஆடாதொடை, வட்டத்திருப்பி, முள்ளிவேர், சந்தனம் என 15 வகையான அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டது நிலவேம்புக் குடிநீர்சூரணம். கபத்தை அறுக்கும் மருந்துஎன்பதால், இது கபசுர குடிநீர் எனப்படுகிறது. இது பல வகை காய்ச்சல்கள் குறிப்பாக, சளி பாதிப்புஅதிகம் கொண்ட நிமோனியா போன்ற காய்ச்சல்களுக்கும் பாரம்பரிய மருந்தாக கொடுக்கப்படுகிறது. கரோனாவும் நிமோனியாபோன்ற பாதிப்பை கொண்டது.

கரோனா தொற்று அதிகரித்த காலங்களில், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் போன்றவை மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதுபோன்ற மாற்று மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டதால், மற்ற மாநிலங்களில் கரோனா அதிகரித்தபோதும், 2-வதுஅலை முன்கூட்டியே ஏற்பட்டபோதும், தமிழகத்தில் நிலைமைமோசமடையவில்லை. எனவே,கடந்த ஆண்டுபோல தற்போதும்கபசுர குடிநீர் விநியோகத்தைஅரசு முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் கரோனாதொற்று அதிகரித்தபோது, மாவட்டஆட்சியர்கள் மூலமாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கப்பட்டு, கூடுதலாக கபசுர குடிநீர்வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று குறைந்ததால், மீண்டும் குறைவானஅளவே கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, கபசுர குடிநீர் விநியோகத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, கபசுர குடிநீரை உற்பத்தி செய்து வழங்கும் தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு கரோனா அதிகரித்த காலத்தில் 400 டன் கபசுர குடிநீர் சூரணம்தயாரித்து அரசுக்கு வழங்கினோம். இப்போதும் தேவை என்றால் உடனடியாக போதுமான அளவு தயாரித்து வழங்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x