ஆசிரியையை ஆபாச படம் எடுத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்: தொலைக்காட்சி உரிமையாளர், நண்பர் கைது

ஆசிரியையை ஆபாச படம் எடுத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்: தொலைக்காட்சி உரிமையாளர், நண்பர் கைது
Updated on
1 min read

விருதுநகரில் ஆசிரியை ஒருவரைஆபாச படம் எடுத்து ரூ.20 லட்சம்கேட்டு அவரது கணவருக்கு மிரட்டல் விடுத்ததாக உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகரில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளர் பிரேம்குமார். இவரதுநண்பர் மணிகண்டன். பிரேம்குமாருக்கு அதே ஊரைச் சேர்ந்ததொழிலதிபர் நடராஜன் என்பவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியையான அவருடன் பள்ளிநிகழ்ச்சிகளை உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும்போது ஏற்பட்ட பழக்கத்தில், ஆசிரியையை ஏமாற்றி அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து பிரேம்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது நண்பர் மணிகண்டனின் தொலைபேசியில் அப்பெண்ணை தவறாக சித்தரித்து புகைப்படம் எடுத்து அவரது கணவர் நடராஜனுக்கு அனுப்பி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் பணத்தை தராவிட்டால் இணையத்தில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் பிரேம்குமாரையும், அவரது நண்பர்மணிகண்டனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in