

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன் னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சூரபத்மனை ஆட்கொண்டு, அருள்புரிந்த இடம் என்பதால் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி அன்று திருச்செந்தூரில் நடை பெறும் சூரசம்ஹாரம் உலக பிர சித்தி பெற்றது. நடப்பாண்டு கந்த சஷ்டி விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் இன்று நடை பெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச் செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீடுகளில் விரதம் மேற்கொண்டுள்ளனர்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் இருந்தும், தமிழகம் முழுவ திலும் இருந்தும் பக்தர்கள் திருச் செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும் போது கடற்கரையில் பல லட்சம் பக் தர்கள் கூடுவார்கள்.
விழாவை முன்னிட்டு திருச் செந்தூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் சூரசம் ஹாரத்தை காண வசதியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டத்தை போலீஸார் கண்காணிக்க கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.