

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னையின் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான மயி லாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் கிராம தேவதை பூஜை நடைபெற்றது.
பங்குனிப் பெருவிழா தொடக் கத்தை முன்னிட்டு, நேற்று காலை 6 மணி அளவில் கொடியேற்று மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பின்னர், கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 25-ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருள் வார். காலை 8.45 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்க உள்ளது.
26-ம் தேதி வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு அருள்பாலிக்கும் அறுபத்து மூவர் விழா நடைபெறுகிறது. 28-ம் தேதி இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 29-ம் தேதி பந்தம் பறி விழாவும் நடைபெற உள்ளன. 30-ம் தேதி விழா நிறைவு திருமுழுக்கு நடைபெறு கிறது.
பங்குனி பெருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வெள்ளி மூஷிக வாகனம், நாகம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை http://www.youtube. com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற யூடியூப் சேனலில் பக்தர்கள் பார்க்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.