Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

பாஜக தமிழகத்தில் காலூன்ற திமுகவே காரணம்: ராமநாதபுரத்தில் சீமான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாஜகவை காலூன் றச் செய்தது திமுகதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரி வித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஜவஹர் (திருவாடானை), சசிகலா (பரமக்குடி), கண்.இளங்கோ (ராமநாதபுரம்), ரஹ்மத் நிஷா (முதுகுளத்தூர்) ஆகியோருக்கு ஆதரவாக ராமநாதபுரம் அரண் மனை முன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழர்கள் தமது தொன்மையின் பெருமையை உணர்ந்து மொழிப் பற்றாளர்களாக இருப்பது அவசி யம். சாதி, மதத்தால் தமிழர்கள் பிரிந்ததாலேயே இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது நம்மால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டது. கச்சத்தீவு மற்றும் காவிரி பிரச் சினைகளில் காங்கிரஸும், பாஜக வும் ஒரே கருத்துடன்தான் செயல் படுகின்றன.

மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கி அதானி, அம்பானிகளிடம் பிரித்துக் கொடுத்துவிட்டனர்.

தமிழகத்தில் மதவாதக் கட்சியான பாஜகவை காலூன்றச் செய்தது திமுகதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத் துவத்தை இலவசமாக தருவோம். அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு அரசுப் பணி வழங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x