

ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பானை மணி(68). இவர் தற்போது ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழாந்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் இவர், இதுவரை பல்வேறு இடங்களில் 20 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தலையில் பானையை சுமந்தபடி வந்த சுயேச்சை வேட்பாளர் பானை மணி. தற்போது 21-வது முறையாக ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை தொகுதியில் போட்டி யிட தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதநாதனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் மண்பானையை தலையில் சுமந்தபடி நடந்து வந்தார்.
பானை மணி செய்தியாளர் களிடம் கூறியதாவது: ராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் இதுவரை 20 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். பெரும்பாலும் எனக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டதால் ‘பானை மணி’ என்றே என்னை அனைவரும் அழைக்கின்றனர். ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.