Published : 02 Nov 2015 07:44 AM
Last Updated : 02 Nov 2015 07:44 AM

தேவகோட்டையில் திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம்

திருக்குறளில் பொதிந்துள்ள வாழ்வியல் நெறிகளை நவீன சிந்தனையுடன் வெளிக் கொண்டு வருவதற்கான திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் டிசம்பர் மாதம் தேவகோட்டையில் நடை பெறுகிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, உலகத் திருக்குறள் பேரவை - குன்றக்குடி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - சென்னை, உலகத் தமிழ் பண்பாட்டு இயக் கம் - புதுக்கோட்டை, மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் - மலேசியா, ஜாமியா அற நிறுவனம் - சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் இணைந்து திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. டிசம்பர் 17-ம் தேதி கருத்தரங்கின் தொடக்க விழா அழகப்பா பல்கலைக்கழகத்திலும் தொடர் நிகழ்வுகள் 18 மற்றும் 19-ம் தேதிகளில் சேவுகன் அண்ணாமலை கல்லூரியிலும் நடைபெறுகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் செயலாளரும் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் கரு.முரு கன் கூறியதாவது: உலகப் பொது மறை என்று போற்றப்படும் திருக்குறளில் வாழ்வியலுக்குத் தேவையான அத்தனை வழி காட்டு நெறிமுறைகளும் பொதிந் துள்ளன. ஆனால், இப்போதுள்ள நவீன சிந்தனைகளுக்கு ஏற்ப திருக்குறளின் வாழ்வியல் சிந்த னைகளும் பண்பாட்டுக் கலாச் சாரமும் வெளிக்கொண்டு வரப் படவில்லை. அப்படி வெளிக் கொண்டு வருவதற்காகவே இந்த பன்னாட்டுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்தக் கருத்தரங்கில் லண்டன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளிநாட்டு பேராளர்கள் 100 பேர் கலந்துகொள்கிறார்கள். இந்திய அளவிலான முக்கிய பல்கலைக்கழகங்களும் கலந்து கொள்கின்றன. இதற்காக பன் னாட்டு பேராளர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்குக்காக, திருக்குறளில் கூறப்பட்டுள்ள ஆளுமை, மேலாண்மை, வணி கம், கல்வியியல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு சிந்தனைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. நவம்பர் 15-ம் தேதிக்குள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றார் கரு.முருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x