

ஆம்பூரில் அனுமதியில்லாமல் ஒலி பெருக்கி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சார வாகனத்தை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை தேர்தல் ஆணையம் விதித் துள்ளது. தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, அதற்கான முன் அனுமதியை மாவட்ட தேர்தல் பிரிவில் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி ஆட்டோவில் கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பொருத்தி அக்கட்சியின் வேட்பாளர் மெக்கருன்னிசாவுக்கு வாக்கு கேட்டு வீதி, வீதியாக அக்கட்சி யினர் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வந்தனர்.
இது குறித்து தகவல் வந்ததை யடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி அளித்த உத்தர வின் பேரில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கு சென்று அனுமதியில்லாமல் ஒலி பெருக்கி கட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.