Published : 25 Jun 2014 08:27 AM
Last Updated : 25 Jun 2014 08:27 AM

கரூரில் பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

பிச்சம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த இளம்பெண் பிளஸ் 2 முடித்து, தனியார் கல்லூரியில் மேல்படிப்புக்கு சேர்ந்திருந்தார். விடுமுறை நாளில் கரூரில் உள்ள கொசுவலை நிறுவனத்தில் வேலைக்கு சென்றுவந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணியாகியும் அவர் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை தேடிச்சென்றபோது பிச்சம்பட்டி சாலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் அந்த பெண் சடலமாக கிடந்தார்.

ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு மறியலில் ஈடுப்பட்டனர்.

திருச்சி சரக டிஐஜி செந்தாமரைக் கண்ணன், கரூர் மாவட்ட பொறுப்பு அதிகாரியான திருச்சி காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் வரி மற்றும் காவல் கண்காணிப் பாளர்கள் ஜியாவுல்ஹக் (அரியலூர்), உமா (புதுக்கோட்டை) ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மேலும், சந்தேகத்தின்பேரில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 7 பேரிடம் மாயனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் மறியல்…

கரூர் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் ணின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது பெற்றோர், உறவினர் குற்றவாளி களை உடனே கைது செய்ய வலியுறுத்தி சடலத்தைப் பெற மறுத்து, கரூர் அரசு மருத்துவமனை அருகில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, உமா, காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.எம்.இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் கு.கார்த்திகேயன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 நாள்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் சடலத்தை பெற்றுச் சென்றனர்.

இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை யானது உறுதியாகி உள்ள நிலை யில், இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவிலும், விசாரணையிலும் தெரியவருமென போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத் தில் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளதாக குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஜமீம் தெரிவித்தார்.

தொடரும் சம்பவங்கள்…

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சிறுமிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை காரண மாக கரூர் மாவட்டத்தில் பெண் தற்கொலை, கொலை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது தொடர்ச்சியாகி வருவதால் இப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x