தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழுவிரோதி பாஜக: ப.சிதம்பரம் பேச்சு

தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழுவிரோதி பாஜக: ப.சிதம்பரம் பேச்சு
Updated on
1 min read

‘‘தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழுவிரோதி பாஜக’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

அவர் காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமை, கட்சியை ஜெயலலிதாவிடம் அடகு வைத்தது. அதற்கு நான் அன்றே தலைமையிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்.

இன்று நாம் திமுகவுடன் சேர்ந்து போட்டியிடுகிறோம். கடந்த 1971-ம் ஆண்டு இருந்த எதிரியை விட, 1996-ல் இருந்த எதிரியை விட 2021-ல் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்குமான மிகப்பெரிய எதிரியை சந்திக்கிறோம்.

தேர்தலை திருடிக் கொள்ளும் கட்சி பாஜக. அக்கட்சி அதை உயர்ந்த கலையாக மாற்றியுள்ளது. மற்ற மாநிலங்களில் சில்லரையாக எம்எல்ஏக்களை வாங்கினார்கள். தமிழகத்தில் மொத்தமாக ஒரு கட்சியையே வாங்கிவிட முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் முதல்வரும், துணை முதல்வரும் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர்.

நான்கு ஆண்டு காலம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் கடைசி காலத்தில் அறிவிப்பு செய்தது ஏமாற்று வேலை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்தாரா என்றே தெரியாது.

இந்தத் தேர்தலில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏனென்றால் தேர்தலுக்கு பிறகு நிறைவேற்ற வேண்டிய இடத்தில் அவர் இருக்கப் போவதில்லை.

வெற்றி பெற்றவர் செய்தால் நாங்கள் சொன்னதை செய்தார்கள் என்று சொல்வார். செய்யவில்லை என்றால் நாங்கள் சொன்னதை செய்யவில்லை என்று கூறுவார்.

அதனால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று சொல்கிறார். கொள்கையால் வேறுபட்டாலும் மொழியால் தமிழினம் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழுவிரோதி பாஜக , என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in