திருச்செந்தூரில் சஷ்டி விழா இன்று தொடக்கம்: 17-ல் சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் சஷ்டி விழா இன்று தொடக்கம்: 17-ல் சூரசம்ஹாரம்
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திரு விழா இன்று (நவ.12) தொடங்கு கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 5.15 மணி முதல் 5.45 மணிக்குள் ஜெயந்திநாதர் யாக சாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது.

நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு யாகசாலை யில் இருந்து ஜெயந்திநாதர் தங்கசப் பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தி யங்களுடனும் சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறும்.

மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி, தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.

இரண்டாம் நாள் திருவிழாவான நாளை முதல் 5-ம் நாள் திருவிழா வான வரும் 16-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக் கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ் வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.

சூரசம்ஹாரம்

6 ம் நாள் திருவிழாவான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதி காலை 2 மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷே கம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் தொடர்ந்து நடை பெறும். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

திருக்கல்யாணம்

7-ம் நாள் திருவிழாவான 18-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வ ரூபம், அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in