

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
ஐபேக் நிறுவனத்தினர் ரவுடிகள், குண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேரை தொண்டாமுத்தூரில் களமிறக்கியுள்ளனர். அதிமுகவினரிடம் வம்பிழுத்து, பிரச்சினைகளை உருவாக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கிறது.
எனவே, அதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும். குறுக்குவழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தது, இரட்டை இலையை மீட்டது நான்தான் என்பதால், ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.