

மாணவிகளுக்கு மது விற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 11-ம் வகுப்பு மாணவிகள் 7 பேர் வகுப் பறையில் மது குடித்ததாக வெளி யாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண் டும். ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பள்ளி களுக்கு அனுப்பப்படும் மாணவி கள், வகுப்பிலேயே மது அருந் தும் அளவுக்கு துணிந்திருக்கின் றனர் என்றால் அதற்கான புறச் சூழல்கள் உருவாக்கப்பட்டிருக் கின்றன என்றுதான் பொருள். 15 வயது மாணவி களுக்கு மது விற்பனை செய்யப்பட்டது கடுமையான விதி மீறல் ஆகும்.
தமிழகத்தில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக் கின்றன. பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மதுக் கடை திறக்கக்கூடாது என்று விதிகளில் கூறப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அரசே, அந்த விதியை மீறி பள்ளி களுக்கு அருகில் மதுக்கடை களை திறக்கிறது. கைக்கு எட்டும் தொலைவில் மது தாராளமாக கிடைப்பதுதான் மாணவ, மாணவிகள் மதுப் பழக்கத்துக்கு ஆளாவதற்கு முதன்மைக் காரணமாகும். வகுப்பறையில் மது அருந்தியதாக இப்போதும், இதற்கு முன்பும் பள்ளியிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியரை கண்டித்து அறிவுரைகளும் மனநல ஆலோசனைகளும் வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விரோதமாக மது கிடைக்க காரணமாக இருந்தவர்கள் மற் றும் பொறுப்பேற்க வேண்டிய வர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும். இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சீர ழித்து வரும் மதுவை ஒழிக்க தமி ழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஒரு வேளை இதை செய்ய அரசு மறுத் தால் பாமக ஆட்சியில் முதல் நட வடிக்கையாக மதுவிலக்கு நடை முறைப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவிகளுக்கு சட்ட விரோதமாக மது கிடைக்க காரணமாக இருந்தவர்கள் மற்றும் பொறுப்பேற்க வேண்டியவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.