

காட்டுமன்னார்கோவிலில் அதி முக வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறனுக்கு வாக்கு கேட்டு நேற்றிரவு முதல் வர் பழனிசாமி பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடம் எல்லாம், ‘அதிமுக காணாமல் போய்விடும்; அதிமுக கூட்டணி சுக்குநூறாக போய்விடும்’ என்று பேசி வருகிறார். காட்டு மன்னார்கோவிலில் கூடி இருக் கும் கூட்டத்தை பார்த்தால் கூட்ட ணியின் வலிமையை உணரலாம்.
ஏராளமான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது. இந்த சாதனைகளைச் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. மக்கள் கொடுத்தால் ஸ்டாலின் முதல்வராகட்டும், திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அக்கட்சியில் துரைமுருகன், பெரியசாமி போன்ற பெரிய தலைவர்கள் இருக்கும் போது குட்டிப்பையன் உதயநிதி பேசி வருகிறார். திமுகவின் பரிதாப நிலையை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். ஸ்டாலினுடைய மூலதனம் பொய் மட்டுமே.
தமிழகம் முழுவதும் 52 லட் சத்து 34 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்வித்தரம் உயர்ந் துள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு இல வச மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே ஆளுமை உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவிலேயே அமைதி மாநிலம் தமிழகம், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மத, சாதிச் சண்டைகள் இல்லை. மக்களுக்கு அமைதியைக் கொடுக்கும் கட்சியாக அதிமுக அரசு உள்ளது. அமைதியை விரும்புவோர் அதிமுகவை விரும்புவார்கள்.
இப்பகுதியில் இருந்து மறைந்த ஆதிதிராவிட இன தலைவரும், முன்னாள் எம்பியுமான இளையபெருமாளுக்கு காட்டுமன்னார் கோவில் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும். அதிமுக அரசுபல திட்டங்களை செயல்படுத்தி யுள்ளது. இன்றும் பல திட்டங் கள் வர உள்ளன. ரூ.500 கோடி யில் கொள்ளிடம் ஆற்றில் கதவ ணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.
முதல்வரின் இப்பிரச்சாரத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளர் முருகுமாறன், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் பாண்டியன், புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.