

காரைக்கால் மாவட்டம் நிரவி- திருப்பட்டினம் தொகுதியின் தற் போதைய திமுக எம்எல்ஏ கீதா ஆனந்தன், அந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள கீதா ஆனந்தனுக்கு, மீண்டும் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்க ளிடையே இருந்து வந்தது. ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்புவழங்கப்படவில்லை. இதற்கு காரைக்கால் திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம்தான் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த கீதா ஆனந்தன், நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டி யிட தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.ஆதர்ஷிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஆனந்தன், “நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சிலருடைய காழ்ப்புணர்ச்சியால் எனக்கு மீண்டும் போட்டியிட கட்சியில் வாய்ப்பளிக் கப்படவில்லை. இந்த நிமிடம் வரை நான் கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள் ளேன். மக்களின் பேராதரவுடன் கண்டிப்பாக வெற்றி பெற்று, தொடர்ந்து சேவை செய்வேன்’’ என்றார்.
இதேபோல, காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக் கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் காரைக்கால் மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர் விக்னேஸ்வரன் களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில், இந்தத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டதால் அதிருப்தியடைந்த விக்னேஸ்வரன் நேற்று சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளரின் சகோதரர்
புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரான மறைந்த வி.எம்.சி.சிவக்குமார் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரன் கடந்த16-ம் தேதி பாஜகவில் இணைந்ததையடுத்து, நிரவி- திருப்பட் டினம் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, வி.எம்.சி.எஸ்.மனோகரனின் சகோதரர் வி.எம்.சி.எஸ்.ராஜகணபதி, இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.