Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

பாஜக, அதிமுக தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸார் சுயேச்சையாக போட்டி: புதுவையில் கூட்டணி வேட்பாளர்கள் அதிருப்தி

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்., பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்ஆர் காங்கிரஸூக்கு 16, பாஜகவுக்கு 9, அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இதில் என்ஆர் காங்., அதிகாரப்பூர்வமாக தொகுதி, வேட்பாளர்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் வேட்பாளர்கள் அவர்களுக்கு ஏற்ற நாளில் மனுத்தாக்கல் செய்துவிட்டனர்.

பாஜகவுக்கு காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, திருநள்ளாறு, காலாப்பட்டு, நிரவி, மண்ணாடிப்பட்டு, ஊசுடு, மணவெளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்குகாரைக்கால் தெற்கு, உருளையன்பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாஜக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த பிரமுகர்கள் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளனர்.காலாப்பட்டில் பாஜக வேட்பாளர் கல்யாணசுந்தரத்தை எதிர்த்து என்ஆர் காங்கிரஸில் அண்மையில் இணைந்தசெந்தில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இவருக்கு என்ஆர் காங்கிஸ் தலைவர் ரங்கசாமி ஆசிர்வாதம் வழங்கி வேட்பு மனுவை வழங்கும் வீடியோ பரவியது. பாஜக போட்டியிடும் தொகுதியான திருநள் ளாறில் என்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவா சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல்அதிமுக வேட்பாளர் போட்டியிடும் உருளையன்பேட்டை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ நேரு மனுத்தாக்கல் செய்துள்ளார். முத்தியால் பேட்டையில் அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனுக்கு எதிராக என்ஆர்காங்கிரஸ் பிரகாஷ்குமார் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி அதிமுக, பாஜக தங்கள் கட்சி தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் அக்கட்சி யின் எம்பி ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்டதற்கு, “என்ஆர் காங்கிரஸ் உள்கட்சியில் நாங்கள் தலையிட முடியாது. இது மிகவும் எளிதான விஷயம். காங்கிரஸில் நடப்பதுபோல் இங்கு நடக்காது.” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x