தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பெறும் வைப்புத் தொகையை மின்னணு பணப் பரிமாற்றத்தில் பெறாததேன்?

வேட்புமனு தாக்கலுடன் ரொக்கப் பணத்தை செலுத்தும் வேட்பாளர்.
வேட்புமனு தாக்கலுடன் ரொக்கப் பணத்தை செலுத்தும் வேட்பாளர்.
Updated on
1 min read

தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்களிடம் பெறும் வைப்புத் தொகையை மின்னணு பணப் பரிமாற்றத்தில் பெறாததேன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்கள் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். வேட்பு மனுவின் போது ரொக்கமாக செலுத்த வேண்டும். ஆனால், அனைத்துப் பரிமாற்றங்களும் மின்னணு முறையில் இருக்க வேண்டும் என மத்திய, மாநிலஅரசுகள் வலியுறுத்தி நடை முறைப்படுத்தப்படுகிறது. உதாரணமாக வாகனங்களில் விதிமீறு வோரிடம் பணப் பரிமாற்ற அட்டையைப் பயன்படுத்தியோ அல்லது ஆன் லைன் மூலமா கவோ அபராதம் செலுத்த வேண் டும். போட்டித் தேர்வுகளில் பங் கேற்போரும் ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆன் லைன் மூலமாகவோ அல்லது ஏடிஎம் கார்டைப்பயன்படுத்தியோ பணத்தை செலுத் தும் வசதியை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வராதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமாரிடம் கேட்டபோது, "ஆன் லைன் மூலமாக வேட்பு மனுத் தாக்கல் செய்வோர் ஆன்லைன் மூலமாக வைப்புத்தொகை செலுத் தும் வசதி உள்ளது.அதேபோன்று நேரடியாக வேட்புமனுத் தாக்கல் செய்வோர் வைப்புத்தொகையை கருவூலத்தில் செலுத்தி அதன் ரசீதை இணைத்துக் கொடுக்கும் வசதி உள்ளது. ஆனால் ஏடிஎம் கார்டை பயன் படுத்தியோ, இன்டர்நெட் பேங்க் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கவில்லை.

இனிவரும் காலங்களில் அதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு உண்டு" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in