Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

தமிழகத்தை குடும்ப சொத்தாக நினைக்கும் திமுக: பாஜக தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி பேச்சு

தமிழகத்தை குடும்ப சொத்தாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் நினைக்கின்றனர் என்று பாஜக தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் டி.குப்புராமை ஆதரித்து தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார்.

கட்சியின் தேசிய பொதுச்செய லாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி பேசியதாவது: பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்றும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திமுகவும், காங்கிரசும் தமிழ கத்தை குடும்பச் சொத்தாக நினைத்து சுரண்டி வருகின்றனர். இலங்கைத் தமிழர் பிரச் சினையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தபோது திமுக, காங்கி ரஸ் வேடிக்கை பார்த்தன. ஆனால், எந்த அரசியல் தலை வரும் செல்லாத நிலையில், இலங்கை சென்று தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுக கூட்டணி மிக பலமாக உள்ளது. ஆகவே சாதகமான சூழலைப் பயன்படுத்தி பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது அவசியம் என்று பேசினார்.

பாஜக மாநில அமைப்பாளர் கேசவவிநாயகம், மாநில நிர் வாகி சுப.நாகராஜன், மாவட்டப் பொதுச்செயலர் குமார், செய்தித் தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x