மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடி பாசனத்திற்காக மஞ்சளாறு அணையிலிருந்து நாளை (8.11.2015) முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in