

கோவை விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் பணிப் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை செல்போனில் புகைப்படம் எடுத் ததாக 3 பயணிகள் நேற்று கைது செய் யப்பட்டுள்ளனர்.
கோவை விமான நிலையத் திலிருந்து தினமும் இரவு 10.25 மணிக்கு சென்னைக்கு இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் சென்று வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இந்த விமானம் கோவை விமான நிலையத்திலி ருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் சுமார் 130 பயணிகள் இருந்தனர்.
அப்போது விமானத்தின் உள்ளே 3 பயணிகள் குடிபோதை யில், சக பயணிகளிடையே பிரச் சினையில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டித்த மற்ற பயணிகள், விமா னத்தில் பணிபுரியும் ஊழியர்களி டம் புகார் தெரிவித்தனர். குடி போதையில் இருக்கும் 3 பேரை யும் வெளியேற்ற வேண்டும், இல்லாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறுவதாக அனைத்துப் பயணிகளும் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குடிபோதையில் இருந்த நபர்களும் பிரச்சினையில் ஈடுபட்டதால், அவர்களை சமாதா னப்படுத்தும் முயற்சியில் விமானப் பணிப்பெண்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் மூவரும் போதை யில் எல்லை மீறி, பணிப்பெண் களிடமே தகராறில் ஈடுபட்டு, அவர்களை செல்போனில் புகைப் படம் எடுக்க முயன்றதாகத் தெரி கிறது. இதனால் விமானத்துக்குள் பிரச்சினை மேலும் அதிகரித்தது.
இதில் ஆத்திரமடைந்த விமா னப் பணிப் பெண்கள், நிலைய அதிகாரிகளுக்கும், இண்டிகோ விமான நிறுவனத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல றிந்து அங்கு வந்த அதிகாரிகள் பிரச்சினையில் ஈடுபட்ட 3 பயணி களையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பணிப் பெண்களிடம், பிரச் சினையில் ஈடுபட்டு செல்போனில் அவர்களை புகைப்படம் எடுத்த தாக விமான நிறுவன மேலாளர் சரவணன், போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீஸார் 3 நபர்களையும் கைது செய்தனர். இந்த பிரச்சினை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் சுமார் 45 நிமிடம் தாமத மாக சென்னைக்கு புறப்பட்டது.
விசாரணையில், ஈரோடு மாவட் டம் பெருந்துறையைச் சேர்ந்த ராஜா(40), செந்தில் குமார்(40), திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சாமி நாதன்(32) என்பது தெரியவந்தது. மூவர் மீதும் பெண்களுக்கு எதி ரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூவரையும் கோவை ஜெ.எம்.6 நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.