

ஆந்திர மாநில சிறைகளில் உள்ள தமிழர்களை மீட்கும் முயற்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஈடுபட வேண் டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் முதுநிலை சிறப்பு மருத்துவப் பட்டப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘நாட்டின் பொதுநலன் கருதி சிறப்பு மருத்துவ பட்டப் படிப்புகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் வகுக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதே நேரத்தில் ‘ஆந்திரம், தெலங்கானாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் 371-வது பிரிவின் கீழ் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த விவ காரத்தில் கவனம் செலுத்தி முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை தொடர வழி காண வேண்டும்.
‘நமக்கு நாமே’ பயணம் மேற் கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ஆந்திர சிறையில் வாடும் தமிழக தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் 63, கடப்பா மாவட்டத்தில் 43 என மொத்தம் 106 தமிழர்கள் எவ்வித விசாரணையும் இன்றி பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்பதற்கான முயற்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஈடுபட வேண்டும்.
உண்ணாவிரதத்துக்கு ஆதரவு
கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 4-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறுகிறது. இதற்கு ஆதரவளிக்கு மாறு கூட்டமைப்பின் நிர்வாகிகள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத் தனர். தமிழக விவசாயிகள் நலனுக் கான போராட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு என்றும் உண்டு என அவர் களிடம் உறுதி அளித்துள்ளேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.