

திருச்சி மாநகர துணை மேயராக இருந்த ஆசிக் மீரா திங்கள்கிழமை காலை தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்து மேயர் ஜெயாவிடம் கடிதம் கொடுத்துள் ளார். இந்த திடீர் ராஜினாமாவின் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் இருந்திருக்கிறது.
இளம்பெண் ஒருவருடன் ஆசிக் மீரா பழகி அவரை ஒரு குழந் தைக்கு தாயாக்கி விட்டு கண்டு கொள்ளாமல் ஏமாற்றிய காரணத் துக்காக அதிமுக மேலிடம், துணை மேயர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னதாக தகவல்கள் உலாவருகின்றன.
ஆசிக் மீரா (29) மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன். திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரியம் பிச்சை, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க 2011 மே 23-ம் தேதி சென்னை செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு இறுதி மரியாதை செய்ய திருச்சி வந்த தமிழக முதல்வர் அந்தக் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதன் விளைவாக அவரது மூத்த மகன் ஆசிக் மீராவுக்கு மாநகராட்சி உறுப்பினர் சீட் கொடுத்து அவரை மாநகராட்சி துணை மேயராகவும் ஆக்கினார்.
துணை மேயர் ஆன போது ஆசிக் மீராவிற்கு வயது 27. இத்தனை சிறிய வயதில் தமிழகத்தில் யாரும் துணை மேயராக இருந்ததில்லை. அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமான பதவியை நல்லவித மாக மக்கள் பணியாற்றி தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டார் ஆசிக் என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.
பதவி விலக காரணம்..?
“திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா தன்னை கர்ப்பமாக்கி விட்டு குடும்பம் நடத்த வராமல் புறக்கணிக்கிறார். அவரது அத்தை, நண்பர்கள் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். என்னை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தன்று புகார் மனு அளிக்க வந்தார் துர்கேஸ்வரி (28) என்கிற இளம்பெண். அவரிடம் மனுவை வாங்கிக்கொண்ட காவல் ஆணையர் அலுவலக அலுவலர் கள் துர்கேஸ்வரியை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்கேஸ்வரி பிறகு பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு புகார் மனுவுடன் நடையாய் நடந்தார். அப்போது எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் மே 4-ம் தேதி திருச்சி அரசு மருத்துவ மனையில் துர்கேஸ்வரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைக் கடத்தவும் முயற்சிகள் நடந்தன. பிறகு அந்த முயற்சிகள் பலனளிக்காததால் ஆசிக் மீரா தரப்பினர் என சொல்லிக் கொண்டு சிலர் வீடு தேடிச் சென்று துர்கேஸ்வரியிடம் தகராறு செய்யும் படலம் தொடங்கியது.
துர்கேஸ்வரி மறுபடி நீதி கேட்டு தனது போராட்டத்தைத் தொடக் கினார். சனிக்கிழமை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த ஆசிக் மீரா, துர்கேஸ்வரியை அநாகரி கமான வார்த்தைகளால் பேச பதிலுக்கு அந்தப் பெண்ணும் பேச இருவரையும் ஆய்வாளர் ஜெயசுதா படாத பாடுபட்டு சமாதானப் படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். பிறகு தனது வழக்கறிஞர் பானு மதியுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் காவல்நிலையம் சென்றார் துர்கேஸ்வரி.
காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்ய மறுக்கவே துர்கேஸ் வரியும் வழக்கறிஞர் பானுமதியும் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடக்கினர். இந்த தகவல் உளவுப் பிரிவு காவல் துறை மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. திங்கள் கிழமை காலை மாநக ராட்சி சார்பில் நடைபெற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஆசிக் மீரா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்ததாம். பேசி முடித்ததும் வாடிய முகத்துடன் மேயர் ஜெயாவின் வீட்டுக்குச் சென்ற அவர், சில நிமிட ஆலோசனைக்குப் பிறகு சொந்தக் காரணங்களுக்காக துணை மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்.
உறுப்பினராக நீடிப்பார்…
மேயர் ஜெயாவிடம் இதுகுறித்து கேட்டபோது, “சொந்தக் காரணங்க ளுக்காக பதவி விலகுவதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமா மாமன்றக் கூட்டத் தில் உறுப்பினர்களின் ஒப்புத லுக்கு வைக்கப்பட்டு ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாததால் மாமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பார்” என்றார்.