‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், FIITJEE இணைந்து நடத்தும் ‘குடும்ப வேடிக்கை’ ஆன்லைன் விநாடி - வினா: 3 பிரிவுகளாக 21-ம் தேதி நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், FIITJEE இணைந்து நடத்தும் ‘குடும்ப வேடிக்கை’ ஆன்லைன் விநாடி - வினா: 3 பிரிவுகளாக 21-ம் தேதி நடைபெறுகிறது
Updated on
1 min read

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், FIITJEE உடன் இணைந்து ‘குடும்பவேடிக்கை’ விநாடி வினா (மைண்ட்பெண்ட்) எனும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த ஆன்லைன் நிகழ்ச்சி, மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் வேண்டுகோளுக்கிணங்க வரும் 21-ம் தேதி (ஞாயிறு) நடைபெற உள்ளது.

இன்றைய பரபரப்பான சூழலில்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருப்பது என்பது அருகி வருகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பங்கேற்கும் வேடிக்கைவிநாடி வினா நிகழ்வை ஆன்லைன் வழி நடத்துகிறது.

‘மைண்ட் பெண்ட்’ எனப்படும் இந்த நிகழ்வு, குழந்தைகளை ஒரு குழுவுக்கான வீரராகப் பணியாற்ற கற்றுக் கொடுக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் குடும்ப உறுப்பினர்கள் 2 ஸ்மார்ட் செல்பேசி அல்லது மடிக்கணினி ஒன்றை அவசியம் வைத்திருக்க வேண்டும். இதில், பங்கேற்க கட்டணம் கிடையாது.

6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் குடும்பம் ஜூனியர் பிரிவிலும், 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் குடும்பம் நடுத்தர பிரிவிலும், 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் குடும்பம் சீனியர் பிரிவிலும் இடம்பெறும்.

ஜூனியர் பிரிவுக்கான போட்டி மார்ச் 21-ம் தேதி காலை 10 மணிக்கும், நடுத்தர பிரிவுக்கான போட்டி மதியம் 12 மணிக்கும், சீனியர் பிரிவுக்கான போட்டி மாலை 4 மணிக்கும் நடைபெறும். இந்த விநாடி வினாவில் பங்கேற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு 60 நிமிட அவகாசத்தில் 30 கேள்விகள் கேட்கப்படும். இதில் விரைவாகப் பதிலளிக்கும் போட்டியாளர் வெற்றிபெறுவார்.

ஒவ்வொரு பிரிவுக்கும் 3போட்டியாளர்கள் வெற்றியாளர்களாகவும், 7 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’பின் இயக்குநர் வினோத் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்.

விநாடி வினா நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/event/82-mindbend.html என்ற லிங்க்கில் மார்ச் 19 (நாளை) மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 90039 66866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in