கோவையில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை தவிர்க்க கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று பொதுமக்களுக்கு கரோனா நோய் தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி. அருகில், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர்.  படம்:ஜெ.மனோகரன்
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று பொதுமக்களுக்கு கரோனா நோய் தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி. அருகில், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர். படம்:ஜெ.மனோகரன்
Updated on
2 min read

கரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், மீண்டும் பரிசோதனை களை அதிகப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், கரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் ஒத்து ழைக்க வேண்டும் என்றும் மாநக ராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் செல்லுதல் உள்ளிட்டவிதிமுறைகளைப் பின்பற்றா வதவர்கள் மீது கடும் நடவடிக்கை களை மேற்கொள்ள, அந்தந்த மாவட்ட நிர்வாகங் களுக்கு அரசுத் தரப்பில் உத்தர விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரிக் கும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

1500 பேருக்கு பரிசோதனை

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் தற்போது 1,500 பேருக்கு நகர்ப்புற சுகாதார நிலையப் பணியாளர்கள் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பரிசோதனை நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்கள் தாங்களாகவே சென்று, பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கரோனா தொற்று ஏற்கெனவே உச்சத்தில் இருந்த நிலையில் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தனியார் மருத்துவமனைப் பணியாளர்களும் மாநகராட்சி சுகாதாரத்துறை பணிக்காக அழைக்கப்பட்டி ருந்தனர். கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் குறைந்த காரணத் தால், அவர்கள் ஏற்கெனவே பணி செய்த மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போதுள்ள சூழலில் கரோனா பரவல் அதிகரிப்பதால் சோதனை செய்வதையும் தற்காலிக ஏற்பா டுகள் மூலமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாநகரில் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல், தடுப்பூசிபோடும் பணிகளும் துரிதப்படுத் தப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் முக்கியத் துவத்தையும், தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. வாகனங்களில் சென்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள் ளப்படுகிறது.

ஒத்துழைக்க வேண்டும்

கரோனா பரவலைக் கட்டுப் படுத்த அரசு எத்தகைய நடவடிக்கைஎடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. பொதுவெளியில் செல்வோரில் 70 சதவீதம் பேர் முகக்கவசங்கள் அணிவதில்லை.

ஊரடங்கு நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகியவை அரசின் வழிகாட்டுதல்களை பின்பற் றாமலேயே நடத்தப்படுகின்றன. இவையே தொற்று மீண்டும் பரவ முக்கியக் காரணம்.

மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. அதே நிலை இங்கும் வராது என்று கூறி விட முடியாது. எனவே, முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் மீண்டும் வருவதைத் தவிர்க்க வேண்டுமெனில், பொதுமக்கள் அரசு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை ஆட்சியர் ஆய்வு

கோவை காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலைய வளாகத்தில், கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, காந்திபுரம் நகரப் பேருந்துநிலையத்தில் பயணிகளிடம் கரோனா நோய் தடுப்பு விழிப்பு ணர்வு துண்டுப் பிரசுரங்களையும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது தினமும் 650 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளால் பின்னர் தினமும் 50 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததால், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசு பலமுறை அறிவுறுத்தியும், பொதுஇடங்களில் முகக்கவசம் இல்லாமல் மக்கள் வெளியில் நடமாடுகின்றனர். அவர்களுக்கு உள்ளாட்சி மற்றும் காவல் துறை மூலம் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பணி மேற்கொள்ளும் இடங்களில் முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை பணியாளர்கள் பின்பற்றுவதை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல, துணிக் கடைகள், உணவு விடுதிகள், நகைக் கடைகள், திருமண மண்டபங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். முறையாகக் கண்காணிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இறைச்சி, காய்கறி, துணி, நகைக் கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

பெரும்பாலான இடங்களில் குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகியவை அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமலேயே நடத்தப்படுகின்றன. இவையே தொற்று மீண்டும் பரவ முக்கியக் காரணம். மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நிலை இங்கும் வராது என்று கூறி விட முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in