கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னையில் 2 ஆயிரத்தை கடந்தது

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னையில் 2 ஆயிரத்தை கடந்தது
Updated on
1 min read

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று குறைந்து வந்தது. கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,008 ஆக இருந்தது. இது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 1,554 ஆக குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,776 ஆக உயர்ந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி மீண்டும் 2 ஆயிரத்தை கடந்து, 2,135 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக அடையார் மண்டலத்தில் 277 பேர், அண்ணாநகர் மண்டலத்தில் 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 483 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 33,166 பேர் குணமடைந்துள்ளனர். 4,182 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 3 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைகளும் 11 ஆயிரத்துக்கு மேல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூகஇடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் கடுமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in