வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேர்தல் நாடகம்: காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் குற்றச்சாட்டு

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேர்தல் நாடகம்: காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா நேற்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தனது மகன் கனலரசன் ஆகியோருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கனலரசன் கூறியதாவது:

எனது தந்தைக்கு இழைத்த துரோகத்துக்கு சரியான பதிலடி இந்த தேர்தலில் பாமகவுக்கு தரப்படும். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பது ஒருசிலரால் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம்.

பல வருடங்களாக தூர்வாரப்படாத பொன்னேரியை தூர் வாரவும், ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கவும், ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டக்கல்லூரி அமைக்கவும், ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக நிலம் கொடுத்துவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அவர்களது நிலத்தை மீட்டுக் கொடுக்கவும் முற்படுவோம்.

இவ்வாறு கனலரசன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in