

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் பாஜக சார்பில் 9 தொகு திகளுக்கான வேட்பாளர்கள், அதி முக-5 தொகுதிகளுக்கான வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இவற்றில் என்.ஆர்.காங் கிரஸ் கட்சியின் வசம் இருந்து வந்த மண்ணாடிப்பட்டு தொகு தியை, பாஜக பிடிவாதமாக நின்றுகைப்பற்றியது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில்இணைந்த நமச்சிவாயம் இத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல் அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர்போட்டியிட வேட்பு மனுத் தாக்கல்செய்திருந்த நெல்லித்தோப்பு தொகுதியையும் பாஜக தன்வசமாக்கியுள்ளது. இத்தொகுதி யில் ஏற்கெனவே ஓம்சக்தி சேகர் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந் தார். இங்கு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஜான்குமாரின் மகனுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஜான்குமாருக்கு காமராஜ் நகர் தொகுதி ஒதுக் கப்பட்டுள்ளது.
இதுதவிர என்.ஆர்.காங்கிர ஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கல்யாணசுந்தரத்துக்கு காலாப்பட்டு தொகுதி பெறப்பட்டுள்ளது. நிரவி திருப்பட்டினத்தில் முன்னாள் சபாநாயகர் விஎம்சி சிவக்குமாரின் மகன் விஎம்சி மனோகரனை கட்சியில் சேர்த்து, அவருக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், அதி முக தொகுதிகளை பாஜக தன் வசமாக்கியிருக்கிறது.
புதுச்சேரியில் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக தொகுதிகளை பாஜக தன் வசமாக்கியிருக்கிறது.