அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் - ‘தெர்மோகோல்’ அட்டைகளுடன் வந்து வேட்பு மனு

அதிமுக அரசு, செல்லூர் ராஜூவுக்கு எதிரான வாசகங்களுடன்   ‘தெர்மோகோல்’ அட்டைகளை ஏந்தியபடி  வேட்பு மனுத் தாக்கலுக்கு வந்த மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
அதிமுக அரசு, செல்லூர் ராஜூவுக்கு எதிரான வாசகங்களுடன் ‘தெர்மோகோல்’ அட்டைகளை ஏந்தியபடி வேட்பு மனுத் தாக்கலுக்கு வந்த மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மாள், நேற்று ‘தெர்மோகோல்’ அட்டைகளுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சின்னம்மாள் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவர் திமுகவில் மாநகர தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். இருமுறை கவுன்சிலராக இருந்துள்ளார்.

இவர் விராட்டிபத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயாவிடம் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது சின்னம்மாள் ‘தெர் மோகோல்’ அட்டைகளுடன் வந் தார். அந்த அட்டைகளில் அதிமுக அரசையும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவையும் விமர்சித்து பல் வேறு வாசகங்களை திமுகவினர் எழுதியிருந்தனர்.

இது குறித்து சின்னம்மாளிடம், தெர்மோகோல் அட்டைகளுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தது ஏன் என செய்தி யாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், அமைச்சர் செல்லூர் ராஜூ, நீர் ஆவியாவதைத் தடுக்க விஞ்ஞானிபோல் யோசித்து வைகை அணையில் தெர்மோகோல் அட்டைகளை விட்டார். இதைத் தவிர வேறு எதையும் அவர் அமைச்சராக இருந்து சாதிக்கவில்லை. மது ரையை சிட்னியாக்குவேன் என்றார். இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை. வெள் ளந்திபோல் நடித்து மக்களை ஏமாற்றி வருகிறார். அவரை தோற்கடிக்கவே கட்சி என்னைக் களம் இறக்கியுள்ளது. அவரது அரசியலுக்கு இந்த முறை முடிவு கட்டப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in