மத்திய தொகுதியில் ‘சீட்’ கிடைக்காததால் அதிருப்தி: செல்லூர் ராஜூ ஆதரவாளர் சுயேச்சையாக களம் இறங்குகிறாரா?

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்
Updated on
1 min read

அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளரான கிரம்மர் சுரேஷுக்கு மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ‘சீட்’ கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட உள் ளதாகத் தெரிகிறது.

மதுரை மாநகர அதிமுக செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ மாநகர எல்லையில் 4 தொகுதிகள் இருந்தும் ஒன்றில் கூட ஆதர வாளர்களுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால், ‘சீட்’ எதிர்பார்த்த அவரது ஆதர வாளர்கள் அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

குறிப்பாக செல்லூர் ராஜூவின் தீவிர ஆதரவாளரான கிரம்மர் சுரேஷ், இந்தமுறை மத்திய தொகுதியில் ‘சீட்’ எதிர்பார்த்தார். ஆனால், இந்த தொகுதி அதிமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அத னால், அந்த தொகுதியில் ‘சீட்’ எதிர்பார்த்த கிரம்மர் சுரேஷ் கடும் அதிருப்தியடைந்தார்.

சில நாட்களாகத் தேர்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி உள்ளார். அதேபோல், மற்ற தொகுதிகளிலும் ‘சீட்’ எதிர் பார்த்த செல்லூர் ராஜூவின் ஆதர வாளர்களும் தேர்தல் பணிகளில் ஆர்வமில்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் கிரம்மர் சுரேஷ் மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவர் கூறும்போது, போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது. அதற்காக அவசரமாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்றார். தற்போது அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பினர் ஈடு பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இவர் திமுகவில் பிடிஆர்.பழனிவேல் ராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in