

விருதுநகரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஊர்வலமாகச் சென்று முதல் நபராக பிரச்சாரத்தைத் தொடங்கினார் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன்.
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்.
இன்று காலை வேட்பாளர் பாண்டுரங்கன் மற்றும் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் விருதுநகர் எம்.ஜி.ஆர்.சிலை பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
நகராட்சி அலுவலக சாலை, தெப்பம், பஜார், மாரியம்மன் கோயில், மதுரை ரோடு வழியாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சின்னமான தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுமக்களின் கோரிக்களை தெரிவிக்குமாறும், அதை அறிந்து உங்கள் கோரிக்கை எங்கள் வாக்குறுதி எனக்கூறி வாக்கு சேகரித்தார்.
அதன்பின், மதுரை பைபாஸ் மேம்பாலம் பகுதியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தானலட்சுமியிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் ஜவஹரும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.