அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றம்
Updated on
1 min read

மழையின் காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

வானிலை காரணத்தால் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நவம்பர் 12-ம் தேதி நடக்கவிருந்த தேர்வு டிசம்பர் 21-ம் தேதியும், நவம்பர்13-ம் தேதி நடக்கவிருந்த தேர்வு டிசம்பர் 22-ம் தேதியும், நவம்பர் 14-ம் தேதி நடக்கவிருந்த தேர்வு டிசம்பர் 24-ம் தேதி நடக்கவுள்ளது.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in