

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சேலம் வடக்கு தொகுதி திமுகவேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று சத்திரம் பால்மார்க்கெட்டில் இருந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் வரை வீதி வீதியாகச் சென்றுபொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பலர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அதேபோல, வணிக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்டாலினுக்கு கைகொடுத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சேலம் பகுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு மேல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள கடைகளில் மோர் வாங்கிக் குடித்தார்.பிரச்சாரத்தின்போது, வேட்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.