மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி-க்களால் என்ன பயன்? - அமைச்சர் சம்பத் கேள்வி

நெய்வேலியில் அதிமுக கூட்டணிக்கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் பாமக வேட்பாளர் ஜெகனை அறிமுகப்படுத்தி அமைச்சர் எம்சி சம்பத் பேசினார்.
நெய்வேலியில் அதிமுக கூட்டணிக்கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் பாமக வேட்பாளர் ஜெகனை அறிமுகப்படுத்தி அமைச்சர் எம்சி சம்பத் பேசினார்.
Updated on
1 min read

நெய்வேலியில் அதிமுக கூட்ட ணிக்கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் வடக்குத்து பகுதியில் நேற்று நடைபெற்றது.

தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பாமக மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணியன், பாஜக மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் அமைச்சர் சம்பத் பேசி யதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்களால் என்ன பயன் ஏற்பட்டிருக்கிறது. அவர்களால் தமிழகத்திற்கு எந்த ஒரு பயனும் கிட்டவில்லை. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியா னது மகளிருக்கான பொற்கால ஆட்சி. தமிழக விவசாயிகளின் விவசாய கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் ஆகியவைகளை தள்ளுபடி செய்து மக்களின் துயரை போக்கியது பழனிசாமி தலைமையிலான அதி முக அரசு.

இனி கல்விக் கடன் உள்ளிட் டவைகளை ரத்து செய்யவும், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 ரொக்கமும், இலவச வாஷிங் மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த உறுதிஏற்றுள்ளது. இது போல் ஆக்கப் பூர்வ திட்டங்களை அதிமுக போன்றஆளும் அரசால் மட்டுமே முடியும். எதிர்க்கட்சிகள் எது வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. தோழமை கட்சியினர் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லியே, வாக்குகளை சேகரிக்கலாம்.

நெய்வேலி தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் மருத்துவர் ராமதாஸால் அடையாளம் காட்டப்பட்ட வேட்பாளர் ஜெகன் சிறந்த பண்பாளர். தேர்தல் வெற்றி மூலம் சட்டமன்றத்திற்கு செல்வார். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்திற்கு, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் சண் முத்து கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

அதிமுக,பாமக, பாஜக, தாமக, மூமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாமக மாநில துணைத் தலைவர் முத்து வைத்திலிங்கம் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in