சுல்தான்பேட்டை சுகாதார மையத்தில் ஆளுநர் தமிழிசை ஆய்வு

சுல்தான்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை.
சுல்தான்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை.
Updated on
1 min read

சுல்தான்பேட்டை சுகாதார நலவாழ்வு மையத்தில் ஆளுநர் தமிழிசை ஆய்வு மேற்கொண்டார்.

சர்வதேச தடுப்பூசி தினத்தை முன்னிட்டு சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சுகாதார நலவாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சுகாதார மையத்தின் வசதிகள்,குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆளுநர் தமிழிசை, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுசுவர் இல்லாததை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அப்போது அப்பகுதி மக்கள் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் வெளியே வந்த ஆளுநரிடம், ரொட்டி பால் ஊழியர்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.

மனுவில், கடந்த 2003-ம் ஆண்டு கல்வித்துறையின் கீழ் மாணவர்களுக்கு ரொட்டி பால் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 822 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 17 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு அதிகபட்ச கூலியாக மாதம் ரூ.4 ஆயிரம் கொடுக்கின்றனர். அடிப்படை ஊதியம் கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை.

மேலும், பள்ளியில் பால் காய்ச்சுவது மட்டுமல்லாமல் துப்புரவு வேலை, கழிப்பிடம் சுத்தம் செய்வது, மதியம் மாணவர் களுக்கு சாப்பாடு வழங்குவது, பாத்திரம் துலக்குவது போன்ற அனைத்து வேலை களும் செய்து வருகிறோம். மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் வாங்குபவர்கள் கூட இதுபோன்ற அனைத்து வேலைகளையும் செய்வது கிடையாது. ஆனால் நாங்கள் குறைந்த ஊதியத்தில் அனைத்து வேலைகளையும் செய்கிறோம். எனவே எங்க ளுக்கு பணிநிரந்தரம், குறைந்தப்பட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.702 வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆளுநர் தமி ழிசை அங்கிருந்து புறப்பட்டு ராஜ்நிவாஸ் வந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in