

திமுகவில் மாவட்டச் செய லாளராக இருந்தும், தனது அதிகாரத்துக்குட்பட்ட தொகுதியில் தனக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதால் கோபத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தை, மதுரை மேயர் ஆக்குவதாகக் கூறி கட்சித் தலைமை சமாதா னப்படுத்தியதாகத் தகவல் வெளி யாகி உள்ளது.
மதுரை மாநகர திமுக வட க்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கமும், தெற்கு மாவட்டச் செயலாளராக கோ.தள பதியும் உள்ளனர். இந்நிலையில், கோ.தளபதிக்கு, மாநகர வடக்கு மாவட்டத்தில் உள்ள வடக் குத் தொகுதியில் சீட் ஒதுக்கப் பட்டது. இதனால் அங்கு சீட் எதிர்பார்த்து காத்திருந்த பொன். முத்துராமலிங்கம் மிகுந்த ஏமாற் றம் அடைந்தார்.
ஒரு காலத்தில் மதுரையின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா ளராக, அமைச்சராக செல்வாக் குடன் வலம் வந்தவர் பொன். முத்துராமலிங்கம். தற்போது எம்எல்ஏ சீட் மறுக்கப்பட்டதால் கடும் கோபத்தில் இருந்த அவ ரை கட்சித் தலைமை சமாதானப் படுத்தியதாகத் தகவல் வெளி யாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் வாய்ப்பு தருவதாகக் கூறி, அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். இதனால், நேற்று முன்தினம் மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளர் கோ.தளபதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது பொன்.முத்து ராமலிங்கமும் உடன் வந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் கோ.தளபதியுடன் அவர் இணைந்து செயல்படத் தொடங்கி உள்ளதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.