Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM

தென்காசி, ஆலங்குளம் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

தென்காசி: தென்காசி மற்றும் ஆலங்குளம் தொகுதிகளில் முக்கிய கட்சியான அதிமுக மட்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இதுவரை மனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரம்:

ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன்:

இவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.2.53 கோடி அசையும் சொத்துகள், மனைவி பெயரில் 66.85 லட்சம், பிள்ளைகள் பெயரில் 16.71 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள், தனது பெயரில் ரூ.10.15 கோடி மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.3.43 கோடி மதிப்பிலும் அசையாச் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தனது பெயரில் ரூ.71.43 லட்சம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.1.48 கோடி மதிப்பிலும் கடன் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆலங்குளம் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி:

தன்னிடம் 11 கிலோ 200 கிராம் நகைகள் உட்பட ரூ.12.61 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.11.50 லட்சம் மதிப்பில் அசையாச் சொத்துகள், ரூ.1.50 லட்சம் கடன் இருப்பதாக கூறியுள்ளார்.

தென்காசி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ராஜ்:

இவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.1.41 லட்சம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.6.95 லட்சம் மதிப்பிலும் அசையும் சொத்துகள், தனது பெயரில் ரூ.17 லட்சம் மதிப்பில் அசையாச் சொத்துகள், தனது பெயரில் ரூ.4.95 லட்சம் , மனைவி பெயரில் ரூ.3 லட்சம் கடன் இருப்பதாக கூறியுள்ளார்.

தென்காசி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செல்வமோகன்தாஸ் பாண்டியன்:

இவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.33.69 லட்சம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.57.42 லட்சம் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். தனது பெயரில் ரூ.1.52 கோடி மதிப்பில் அசையாச் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.35.51 லட்சம் மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x