சேலத்தில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.
ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (மார்ச் 15) வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர், திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 16) ஸ்டாலின் சேலம் சத்திரம் பால் மார்க்கெட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து ஸ்டாலின் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

செவ்வாய்பேட்டை, சத்திரம் பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் நடந்து சென்றபடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் பலரும் ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

சேலத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.
சேலத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

அதேபோல, வணிக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்டாலினுக்குக் கைகொடுத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சேலம் பகுதியில் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடைகளில் மோர் வாங்கிக் குடித்தார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் சேலம் திமுக எம்.பி. பார்த்திபன் மற்றும் கிழக்குத் தொகுதிப் பொறுப்பாளர் சிவலிங்கம் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in