Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.16,500 கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை முடக்கம் - ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி

பொதுத்துறை வங்கிகளை தனி யார்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக, ரூ.16,500 கோடி மதிப் பிலான 2 கோடி காசோலை பரி வர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

கடந்த மாதம் தாக்கல் செய் யப்பட்ட மத்திய பட்ஜெட்டின் போது, 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக, கடந்த வாரம் மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்கக் கூடாது என ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசு எவ்வித உத்தரவாதமும் வழங்காததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால், வங்கிச் சேவைகள் நேற்று முடங்கின.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் பேசியதாவது:

இந்த வேலைநிறுத்தப் போராட் டத்தில் நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி அதிகாரிகளும் ஊழியர் களும் தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரம் பேரும் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளும், தமிழகத்தில் 16 ஆயிரம் வங்கிக் கிளைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தம் காரண மாக, நாடு முழுவதும் ரூ.16,500 கோடி மதிப்பிலான 2 கோடி காசோ லைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள் ளன. சென்னை காசோலை பரி வர்த்தனை நிலையத்தில் ரூ.5,150 கோடி மதிப்பிலான 58 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கின. மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

அகில இந்திய தேசியமயமாக் கப்பட்ட வங்கி அதிகாரிகள் சம் மேளன பொதுச் செயலாளர் ஜி.வி. மணிமாறன் கூறும்போது, "வங்கி கள் தனியார்மயமாக்கப்படுவதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாட்டின் பொருளாதார நன்மைக் கும் இந்தப் போராட்டம் நடத்தப் படுகிறது" என்றார்.

இப்போராட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி.கிருஷ் ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பல்வேறு ஏடிஎம்-களில் 2 நாட்கள் பணம் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், 3-வது நாளான நேற்று வங்கிகள் இயங்காததால், பல ஏடிஎம்களில் பணம் இல்லை. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது.

தனியார் வங்கிகள் வழக்கம் போல் நேற்று செயல்பட்டன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x