மத்திய, மாநில திட்டம்தான் திமுக தேர்தல் அறிக்கை: ஹெச்.ராஜா கருத்து

மத்திய, மாநில திட்டம்தான் திமுக தேர்தல் அறிக்கை: ஹெச்.ராஜா கருத்து
Updated on
1 min read

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களைதான் திமுகவின் தேர்தல் அறிக்கையாக வந்துள்ளது என காரைக்குடி பாஜகவேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரனிடம் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நீதிமன்றம் முடிவு மூலம்தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழகத்தில் ஏற்கெனவே அம்மா உணவகங்கள் உள்ளன. அதையே கலைஞர் உணவகம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றியுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களைதான் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. தமிழக அரசு கடன் பிரச்சினையில் இருந்து வெளியேற மத்திய அரசு முழு உதவிகளைச் செய்யும். அதனால்தான் மத்திய அரசின் இணக்கத்தோடு இருக்கும் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர வேண்டும் என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in