

தமிழகத்தில் இதுவரை 13,86,379 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மருத்துவக் கல்விஇயக்கக இயக்குநர் ஆர்.நாராயணபாபு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்மாணவிகளை நேற்று பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளில் யாருக்கும் நுரையீரல் பிரச்சினை இல்லை.காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. அதுவும் தற்போது சரியாகி நலமுடன் உள்ளனர். எனவே, 2 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.
தமிழகத்தில் இதுவரை 8.58லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்98 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். தற்போது, சென்னை,செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோவைஆகிய மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொடர்பாக ஓராண்டு அனுபவம் இருப்பதால், சிறப்பாக சிகிச்சை அளிக்கின்றனர். அதனால், இப்போது இறப்பு விகிதம் குறைந்து, அனைவரும் முழுமையாகக் குணமடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 13,86,379பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-ம் சுற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் இதுவரை கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. எனவே,அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இதேபோல, முகக்கவசம், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்றவற்றையும் கடைபிடித்தால் கரோனாவை 100 சதவீதம் தவிர்க்க முடியும். தமிழகத்தில் கரோனா நம் கைக்குள் இருக்கிறது. மீண்டும் நம் கையைவிட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை என்றார்.
இதையடுத்து, ‘தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஓராண்டு காலத்தில் கரோனா தொற்றும் - சிகிச்சையும்’ என்றதலைப்பில் முன்னாள் முதல்வர் (பொறுப்பு) எஸ்.மருததுரை எழுதிய நூலை நாராயண பாபுவெளியிட, அதை மருத்துவக் கல்லூரி முதல்வர் கோ.ரவிக்குமார்பெற்றுக்கொண்டார்.