

பள்ளிபாளையம் காவிரி ரயில்வே பாலத்தில், திரியுடன் மர்மப் பொருள் கிடந்தது. இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்றில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக திருப்பூர், கோவை, பாலக்காடு, கொச்சி, திருவனந்த புரம், மங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் செல் கின்றன.
நேற்று மதியம் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்டவாளத்தில் பிளாஸ்டிக் பை கிடந்தது. அதில், இரு டப்பாவும், அதன் முகப்பில் திரியும் இருந்தது. இதனால், அது வெடி பொருளாக இருக்கலாம் என ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரி வித்தனர். ஈரோடு மாவட்ட வெடி குண்டு செயல் இழப்பு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர். சோதனையில், பிளாஸ்டிக் பையில் இருந்த டப்பாவில் மண் நிரப்பப்பட்டு திரி சுற்றப்பட்டு இருந்தது. வெடிபொருள் எதுவு மில்லை என தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர் கள் நிம்மதியடைந்தனர்.
முன்னதாக ரயில்வே போலீஸார் மற்றும் எஸ்பிக்கள் சிபிசக்கரவர்த்தி (ஈரோடு), செந் தில்குமார் (நாமக்கல்) உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். போலீ ஸாரின் துரித நடவடிக்கையால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.