கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்: விஜயகாந்த் தகவல்

கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்: விஜயகாந்த் தகவல்
Updated on
1 min read

கனமழை காரணத்தால் கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் புயல் காரணமாக கனமழை கொட்டும், சூறாவளி காற்று வீசும், பலத்த சேதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் பல நாட்களாக எச்சரித் தது. எனினும், அரசின் மெத்தன போக்கால், கடலூர் மாவட்டத்தில் 17 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

இயற்கையின் சீற்றத்தை தடுக்க முடியாது என்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும். தற்போது நிவாரணம் வழங்குகிறேன் என்று கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல இடங் களில் மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

“தானே” புயல் பேரழிவை பார்த்த பின்பும் அரசு பாடம் கற்று கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் வாழ்ந்த பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. அவர்கள் வசித்த பகுதி தாழ்வாக இருப்ப தையுணர்ந்து, அவர்களை மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் வெளி யேற்றி இருந்தால் இத்தகைய இழப்பை தடுத்திருக்கலாம்.

உண்மையிலேயே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எவ் வித நிவாரணப் பணிகளும் நடைபெறுவதாக தெரியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர், உணவு, உடை, அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை போர்க் கால அடிப்படையில் வழங்க வேண்டும். மழை இன்னும் 2 நாட் கள் நீடிக்கும் என்று சொல்லப் படுவதால் அதற்கான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண் டும்.

மேலும், கன மழையால் கடலூரில் உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இந்த தொகையை சிதம்பரத்தில் தேமுதிக சார்பில் நடக்கவுள்ள மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டத்தில் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in