

காரைக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் துரை மாணிக்கம் அரிவாள் ஏந்தி கருப்பணசாமி ஆட்டத்துடன் மாட்டு வண்டியில் வந்து தேவ கோட்டையில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் துரைமாணிக்கம் போட்டியிடு கிறார். இவர் மாட்டு வண்டியில் பனியன், துண்டு, வேட்டி அணிந்து கொண்டு விவசாயி போன்று வந்தார்.
உடன் வந்த ஆதரவாளர்கள் அனைவரும் கையில் கரும்பு வைத்திருந்தனர். மேலும் மாட்டு வண்டிக்கு முன்பாக ஆதரவாளர் ஒருவர் அரிவாள் ஏந்தி கருப்பணசாமி வேடமணிந்து ஆட்டமாடியவாறு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.
அப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்ய பாஜகவினரும் அங்கு வந் தனர். இரு தரப்பினரும் மாறி, மாறி கோஷமிட்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து டிஎஸ்பி அருண் தலைமையில் போலீஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.