மக்களுக்குச் சேவை செய்வதே குறிக்கோள்; ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்: குஷ்பு

மக்களுக்குச் சேவை செய்வதே குறிக்கோள்; ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்: குஷ்பு
Updated on
1 min read

மக்களுக்குச் சேவை செய்வதே எனது குறிக்கோள் என்று பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

இந்த முறை தமிழகத் தேர்தல் களத்தில் புதிதாகத் திரையுலகிலிருந்து சில முன்னணி நடிகர்கள் களமிறங்கியுள்ளனர். கமல், குஷ்பு, ஸ்ரீப்ரியா, பாடலாசிரியர் சிநேகன், மயில்சாமி உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

இதில் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சேப்பாக்கம் தொகுதி கிடைக்கும் என்ற ஆவலுடன் களப்பணி ஆற்றி வந்தார் குஷ்பு. ஆனால், அந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் புதிதாகக் களப்பணியைத் தொடங்கியுள்ளார் குஷ்பு. இந்நிலையில் தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"மக்களுக்குச் சேவை செய்வதே எனது குறிக்கோள். முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் அதைச் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். தமிழக மக்கள் எனக்குக் கொடுத்த அன்பு, மரியாதை, ஆகியவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் இந்த வாய்ப்பை நான் தவறவிட மாட்டேன். சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in