மத்திய, மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள்தான் திமுக தேர்தல் அறிக்கை: ஹெச்.ராஜா விமர்சனம்

தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேந்திரனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா.
தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேந்திரனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா.
Updated on
1 min read

‘‘மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தான் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்,’’ என காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரைமாணிக்கம் ஆகியோர் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மனுத்தாக்கல் செய்த பிறகு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நீதிமன்றம் முடிவு மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழகத்தில் ஏற்கனவே அம்மா உணவகங்கள் உள்ளன. அதையே கலைஞர் உணவகம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் திமுக விளையாடியுள்ளதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.

மத்திய ,மாநில அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை தான் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். தமிழக அரசு கடன் பிரச்சினையில் இருந்து வெளியேற மத்திய அரசு முழு உதவிகளை செய்யும். அதனால் தான் மத்திய அரசின் இணக்கத்தோடு இருக்கும் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரனும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in