

சார்ஜாவில் கிளார்க், தட்டச்சர், ஓட்டுனர் பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவன நிர்வாக இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவுக்கு 30 முதல் 35 வயதுக்குட்பட்ட, ஐக்கிய அரசு குடியரசு ஓட்டுனர் உரிமம் எண்- 3 வைத்துள்ள, 2 இலகு ரக வாகன ஓட்டுனர்கள், உரிமம் எண்- 3 மற்றும் 6 வைத்துள்ள ஒரு பேருந்து ஓட்டுனர், உரிமம் எண்-7 மற்றும் 8 வைத்துள்ள 2 போர்க்லிப்ட் மற்றும் ஜேவிசி ஓட்டுனர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.
மேலும், 21 முதல் 35 வயதுக்குட்பட்டு, பி.காம் தேர்ச்சி பெற்று கணக்கு பிரிவில் 8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 2 கிளார்க் மற்றும் தட்டச்சர்கள் தேவைப்படுகின்றனர்.
இப்பணியிடங்களுக்கான தகுதி , அனுபவம், உள்ளிட்ட விவரங்களை >www.omcmanpower.com என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
உரிய தகுதி இருப்பவர்கள், தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், புகைப்படத்துடன், ‘ ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி தொழிற்பேட்டை, சென்னை- 600032’ என்ற முகவரியில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044- 22502267, 22505886,08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.