இரு தொகுதிகளில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முருகன் ஆலயத்தில் நியமன விண்ணப்பத்தை வைத்து பூஜை செய்தனர். படம்: எம்.சாம்ராஜ்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முருகன் ஆலயத்தில் நியமன விண்ணப்பத்தை வைத்து பூஜை செய்தனர். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

தான் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக - பாஜக கட்சிகளுக்கு மீதமுள்ள 14 தொகுதிகளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், அதிமுகவுக்கு ஐந்து தொகுதிகளும், பாஜகவுக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலில் வளர்பிறை நாளான இன்று (மார்ச் 15) பல முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கினர்.

அதன்படி, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறேன். தற்போது தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மனு தாக்கல் செய்துள்ளேன்.

வரும் 17-ம் தேதி ஏனாம் சென்று வேட்புமனு தாக்கல் செய்வேன். எங்கள் கூட்டணியில் குழப்பமில்லை. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்வேன். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in