திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்குகிறார். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 15-ம் தேதி திங்கள்கிழமை கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 173, காங்கிரஸ் உள்ளிட்ட 12 கூட்டணி கட்சிகள் 61 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in